அனுரவின் அதிரடி சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி வருகிறது

0
145

சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

“ஒரு அரசாங்கம் ஊழல்வாதிகளை எவ்வாறு தண்டிக்கும், ஒரு அரசாங்கம் குற்றவாளிகளை எவ்வாறு தண்டிக்கும்? அரசாங்கத்தின் வேலை என்ன? அரசாங்கத்திற்கான சில சட்டங்கள் இங்கே. திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றுவோம். சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம். யாரையும் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இது நமது நாட்டில் சட்டத்தின் ஒழுங்கு, இந்த தாய்நாட்டில் இறையாண்மையை மீண்டும் நிலைநாட்டுவதே எங்கள் எதிர்பார்ப்பு.”

இதன்படி, மோசடி செய்பவர்களுக்கும் ஊழல் செய்பவர்களுக்கும் மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here