ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

Date:

வெல்லவாய – தனமல்வில வீதியின் நுகயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு(04) கெப் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 44 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள், 42 வயதான அவரின் மனைவி மற்றும் 70 வயதான தந்தை ஆகியோரோ உயிரிழந்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த சிறுவனொருவன் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெப் சாரதி மது போதையில் வாகனத்தை செலுத்தியுள்ளதுடன், அவரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...

ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகல் செய்தி உண்மையா?

டொலர் 2.5 மில்லியன் மதிப்பிலான பொருளாதார மோசடி குறித்த விசாரணை நடைபெற்று...

விவசாயிகள் கோரும் அளவிற்கு உரத்தை வழங்க முடியாது

இவ்வருட யாலா (Yala) பயிர் பருவத்திற்கு விவசாயிகள் கோரும் அளவிற்கு முழுமையாக...

எரிபொருள் விலை மீண்டும் உயர்வு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...