ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தை ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் சபை ஒத்திவைக்கும் வேளையில் நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (5) தீர்மானித்ததாக பாராளுமன்றத்தின் பதில் பொதுச் செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
இந்த பிரேரணை எதிர்க்கட்சிகளால் விவாதத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
இதேவேளை, குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நச்சு அபின் மற்றும் ஆபத்தான போதைப் பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான உத்தரவுகள் மீதான விவாதம் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.