இத்தருணத்தில் எவரேனும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டால் நிச்சயமாக பணத்தை பெற்றுக்கொண்டு அந்த நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குறிப்பிடுகின்றார்.
எதிர்க்கட்சியில் இவ்வாறானவர்கள் பலர் இருப்பதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சுப் பதவியின்றி அவர்களால் அதிக காலத்தை கழிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
அமைச்சுப் பதவிக்காக அனைத்தையும் மறக்கக் கூடிய இவர்களுக்குக் குறிப்பிட்ட கட்சி கிடையாது எனவும், தாவி குதிப்பது அவர்கள் எப்பொழுதும் செய்து வரும் ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.