நாடு திரும்பும் தென்கொரிய தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்!

0
134

தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்த பின்னர் தாய் நாடு திரும்பும், இலங்கைக்கான தென்கொரிய தூதுவர், ஜொன்ங் வூன்ஜின் (Jeong Woonjin), ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

தான் நாடு திரும்புவதை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன், சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

ஜொன்ங் வூன்ஜின் (Jeong Woonjin), தனது பதவிக்காலத்தில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அவரின் எதிர்கால பணிகள் வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இந்நிகழ்வில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜயவர்தனவும் கலந்துகொண்டார்.

ஜொன்ங் வூன்ஜின் 2020 ஜூலை 02ஆம் திகதி முதல் இலங்கைக்கான தென்கொரியத் தூதுவராகப் பணியாற்றி வந்தார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here