Saturday, February 24, 2024

Latest Posts

முக்கிய செய்திகளின் சுருக்கம் : 08.04.2023

1.அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், அடிப்படை உரிமைகளை படிப்படியாக மீறுவதற்கு அதிகாரிகளை அனுமதிக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது – இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வாபஸ் பெறுமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோருவதுடன் எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாக இருந்தாலும் அது சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு ஏற்ப உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

2.இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தும் நாடுகள் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டல் தெரிவித்துள்ளார் ; மேற்குலக நாடுகளில் போராட்டம் நடத்துவது ஜனநாயகத்தின் அடையாளம் என கருதுபவர்கள் அவ்வாறான போராட்டங்களுக்கு எதிராக பயண ஆலோசனைகள் வழங்கப்படுவதில்லை, ஆனால், இலங்கையில் போராட்டம் நடந்தால் அனைவருக்கும் பயண ஆலோசனைகளை வழங்குகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

3.ஐக்கிய மக்கள் சக்தியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும், அவர்கள் குழுவாக அந்த ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கூறுகிறார் – யார் எதை சொன்னாலும், ஹர்ஷ டி சில்வா போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் – பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளனர் ஆனால் அவருடன் தேர்தலில் போட்டியிடத் தயங்குகின்றனர்.

4.தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள தேர்தல் முறைமை சீர்திருத்தங்கள் மூலம் சமூகத்தில் இனம், மதம் மற்றும் சாதி அடிப்படையில் மேலும் பிளவுகள் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

5.இலங்கை மத்திய வங்கிச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானதை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் முன்வைத்த விதம் கேள்விக்குரியது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயல்படும் பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க கூறுகிறார் – சபாநாயகர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

6.சட்டக்கல்லூரியில் எதிர்காலத்தில் நடத்தப்படும் பரீட்சைகளை ஆங்கில மொழியில் மாத்திரமே நடத்த வேண்டுமென பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை சட்டக்கல்லூரியின் அதிபர் புறக்கணிப்பதால் அவரை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார போன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7.2022ஆம் ஆண்டில் 320,000 பேர் பணிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். ஒரு வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி முதல் சந்தர்ப்பம் இதுவாகும் – 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொவிட் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்வதும் பணியாளர்கள் பணம் அனுப்புவதும் பெரும் வீழ்ச்சியைக் கொண்டிருந்தன.

8.மோல்டா நாட்டின் சர்வதேச கடற்பகுதியில் பயணித்த நெரிசல் மிகுந்த கப்பலில் 440 அகதிகள் 11 மணி நேர போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக Doctors Without Borders (MSF) கூறுகியுள்ளது. இதில் இலங்கை குடியேற்றவாசிகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

9.இந்தியக் கடன் வசதியின் கீழ் கொள்வனவுசெய்யப்பட்ட மருந்துகளின் தரம், பாதுகாப்பு குறித்து கடுமையான சந்தேகத்தை எழுப்பியுள்ள டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) அமைப்பு தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது – இந்த அடிப்படை உரிமை மீறல் மனு இந்தியாவின் இரண்டு தனியார் நிறுவனங்களிடம் வாங்கிய மருந்துகள் தொடர்பானது.

10.ராஜபக்சர்களை அதிகாரத்திலிருந்து அகற்றியது மூன்றாம் தரப்பினரின் சதி என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். இந்த குற்றச்சாட்டை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே போன்ற பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்துள்ளனர். மேலும் இந்த சதியின் பின்புலத்தில் இருப்பது யாரென எதிர்காலத்தில் வெளிப்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.