இந்திய கடற்படை செயல்பாடுகளை கண்காணிக்க இலங்கையில் ராடார் தளத்தை (radar base) அமைப்பது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக எகனாமிக் டைம்ஸ் (Economic Times) செய்தி வெளியிட்டுள்ளது.
கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அனல் மின் நிலையங்கள், இந்தியாவின் தென் பகுதி உட்பட இந்தியப் பெருங்கடல் பகுதியில் இடம்பெறும் செயல்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் இவ்வாறு ராடார் தளத்தை அமைப்பது சீனாவின் நோக்கமாகவுள்ளதாகவும் எகனாமிக் டைம்ஸ் கூறியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களை உளவு பார்க்க முடியும் எனவும் இந்திய பெருங்கடலில் மேற்கத்திய கடற்படை கப்பல்களுக்கு எதிரான உளவு தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கும் இந்த ரேடார் தளம் உதவும் எனவும் எகனாமிக் டைம்ஸ் (Economic Times) செய்தி வெளியிட்டுள்ளது.
N.S