முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
ரத்மலானை விமான நிலையத்தில் இருந்து N750GF பிரைவேட் ஜெட் விமானத்தில் பசில் ராஜபக்ச இன்று (16) காலை நாட்டை விட்டு புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரத்மலானை அல்லது கட்டுநாயக்க ஆகிய இரண்டு சர்வதேச விமான நிலையங்களில் இருந்து பசில் வெளியேறியதாக எந்தத் தகவலும் இல்லை என பசிலின் பயணம் குறித்து விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் குறித்த விமானம் இன்று காலை இரண்டு வெளிநாட்டவர்களுடன் புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் தொற்று காரணமாக பசில் ராஜபக்ச கொழும்பில் உள்ள லங்கா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நேற்று (15) தெரிவிக்கப்பட்டது.