இலங்கைக்கு வெங்காய சலுகை வழங்கும் இந்தியா

0
55

இந்தியாவில் வெங்காயம் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை உறுதி செய்யவும், விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த 08.12.2023 முதல் மார்ச் 31.03.2024 வரையிலும் தடைவிதித்திருந்தது.

மேலும் இந்த தடைமக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விலை ஏற்றத்தை தவிர்ப்பதற்காக காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது.

முன்னதாக இந்த தடையால் இந்திய வெங்காய ஏற்றுமதியை அதிகளவில் சார்ந்திருக்கும் இலங்கை, வங்கதேசம், நேபாளம்,ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டன.

இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் போன்ற பகுதிகளில் வெங்காய விவசாயம் நடைபெற்றாலும் அது அந்நாட்டு தேவைக்கு போதுமானதாக இல்லை என்பதால் பெரும்பாலும் இந்தியாவில் இருந்து இறக்குதி செய்யப்படும் வெங்காயத்தையே அதிகம் சார்ந்திருந்தது.

தற்போதைய தட்டுப்பாடு வெகுவாக அதிகரித்து முன்னெப்போதும் இல்லாத அளவாகஒரு கிலோ வெங்காயத்தின் விலைதற்போது இலங்கை ரூபாயில் 800 (இந்திய ரூ.225) வரையிலும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை நட்பு நாடு என்ற அடிப்படையிலும் இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டும், வெங்காய ஏற்றுமதி மீதான தடையை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளது.

அத்துடன் 10,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை இந்தியா இலங்கைக்கு ஏற்றுமதிசெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here