ஒரு தொகை அமைச்சர்கள் வெளிநாட்டில்

Date:

இருபதுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் வெளிநாட்டில் இருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பலர் புத்தாண்டு விடுமுறைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன் உள்ளிட்ட அமைச்சர்கள் வெளிநாடுகளில் உள்ளனர்.

வெளிநாட்டில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை பார்க்க சில எம்.பி.க்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 3ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய பின்னர் 24ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு எம்.பி.க்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.

இதேவேளை, புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நுவரெலியா சென்றுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நடக்கவே முடியாத வயதிலும் களத்துக்கு வருகிறார் மஹிந்த!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள்...

இந்திய ஜார்கண்ட் மாநில மாநாட்டில் இதொகா தலைவர், ஶ்ரீதரன் எம்பி பங்கேற்பு

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா...

தங்காலையில் இருவர் சுட்டுக் கொலை

தங்காலை, உனகுருவாவில் உள்ள கபுஹேன சந்திப்பில் நேற்று மாலை 6.55 மணியளவில்...

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து சர்வதேச...