15 இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு

Date:

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 15 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் பொது மன்னிப்பு தினத்தையொட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மியன்மார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 இலங்கை மீனவர்கள் கடந்த டிசம்பர் 2ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், குறித்த இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மியன்மார் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் அடிப்படையில் அந்நாட்டு பிரதமர் பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக பண்டார தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்டவர்கள் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...