400 கோடி பெறுமதி ஹெரோயின் மீட்பு

0
226

போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. 

குறித்த போதைப்பொருள் தொகையைப் பார்வையிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்தார். 

இதற்கமைய, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில், அந்தப் படகில் இருந்த போதைப்பொருள் ஹெரோயின் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 150 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

போதைப்பொருள் சோதனையிடப்பட்டதை அடுத்து, நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த 4 சந்தேகநபர்களும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கரைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர். 

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கடற்படையினரால் இந்தப் நெடுநாள் மீன்பிடி படகு பொறுப்பேற்கப்பட்டதுடன், அதிலிருந்த 6 போதைப்பொருள் பொதிகளுடன் 4 சந்தேகநபர்களும் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here