தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் நம்பிக்கை தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட கடன் தொடர்பான பிரேரணையும் அன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தானும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.