இ.தொ.காவின் போராட்டம் தோட்ட கம்பனிகளின் கவனத்தை ஈர்க்க வில்லை – லெட்சுமணன் சஞ்சய்

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பசறை மக்களிடம் திடீர் காதல் முளைத்து ஏன் என்று தெரியவில்லை.
இன்று பசறை நகரில் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர். நீங்கள் என்ன போராட்டம் நடத்தி என்ன செய்தாலும் பதுளை மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சய் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2020 நடந்த தேர்தலில் மக்களின் எண்ணம் என்ன என்று உங்களுக்கு காட்டி விட்டார்கள். நாங்கள் பெரிய கட்சி என்றார்கள். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இனியும் உங்களால் வெற்றி பெற முடியாது.

அது மாத்திரம் இன்றி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பு புகையிரத நிலையத்துக்கு முன்னால் ம் போராட்டத்தை நடத்தி இருந்தது.

அந்த போராட்டமானது தோட்ட கம்பனிகளின் கவனத்தை ஈர்க்க வில்லை. மாறாக அங்கு வந்த சுற்றுலா பயணிகளின் கவனத்தை தான் ஈர்த்துள்ளது. இவர்களின் போராட்டத்தை பார்த்து சுற்றுலா பயணிகள் வினோதமாக இருந்ததாக கூறினார்கள்.

நீங்கள் போராட்டம் செய்ய வேண்டும் கொழும்பில் அல்ல இப் போராட்டம் தோட்டத்தில் நடத்த வேண்டும். உங்களுக்கு போராட்டம் செய்ய தெரியவில்லை என்றால், எங்களிடம் வாருங்கள் போராட்டம் எப்படி செய்வது என்று சொல்லி தருகின்றோம்.

அது மட்டும் அல்லாமல் இனியும் பதுளை மக்களை முட்டாளாக்க நினைத்தால் அது நீங்கள் உங்களை முட்டாளாக்கி கொள்வதற்கு சமம். நீங்கள் எவ்வளவு போராடினாலும் பதுளை மக்கள் இனி உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றார் லெட்சுமணன் சஞ்சை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...

கைது கதையிலேயே மூழ்கியுள்ள ஜனாதிபதிக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடி புரியவில்லை

கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்குப்...

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...