ஆர்ப்பாட்டக்காரர்களை சுடுமாறு மூன்று அமைச்சரவை அமைச்சர்கள் ரம்புக்கன பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நாடாளுமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கேகாலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஹேரத் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார்.