பால் மா விலை மீண்டும் அதிகரிக்கும்

0
262

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டொலர் நெருக்கடி காரணமாக சில இறக்குமதியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனையடுத்து, அடுத்த வாரம் முதல் நாட்டுக்கு வரவிருக்கும் புதிய கையிருப்புக்கள் தொடர்பில் விலை அதிகரிப்பு குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய ஒரு கிலோ பால் மாவின் விலை 1,345 ரூபாவிலிருந்து 1,945 ரூபாவாகவும், 400 கிராம் பால் மாவின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here