நாட்டில் இன்றைய தினம் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
மேலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.