பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அல்லது நாளை பதவி விலகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படுவதற்கு முன்னர் பிரதமர் பதவி விலகவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.