175 ரூபாவை எட்டிய ஒரு கட்டி சவர்க்கரம் !

0
248

இலங்கையின் வர்த்தக வரலாற்றில் முதல் தடவையாக சவர்க்காரங்களின் விலைகள் அதிகூடிய மட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வெளியாகியுள்ள புதிய விலைக்கமைய, ஒரு சவர்க்காரத்தின் விலை 200 ரூபாயை அண்மித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதற்கமைய ஒரு கட்டி சன்லைட் சவர்க்காரம் 135 ரூபாயை எட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பேபி சவர்க்காரம் ஒரு கட்டி 175 ரூபாயாகவும், லைப்போய் சவர்க்காரம் ஒன்று 145 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. இவ்வாறான விலைகளிலேயே ஏனைய சவர்க்காரங்களும் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

புதிய சவர்க்கார விலைகளை உறுதி செய்யும் புகைப்படங்களை பொது மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here