ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பல வீதிகளில் பொலிஸார் தடுப்புகளை ஏற்படுத்தினர்

0
91

கொழும்பு காலி முகத்திடலை நோக்கி வருகைத் தரவுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டப் பேரணியை தடுப்பதற்காக வீதித் தடைகள் போடப்பட்டுள்ளன.

கொழும்பு நகரில் முக்கியமான இடங்கள் அமைந்துள்ள பகுதிகள் உள்ளடங்கும் வகையில் இன்று முற்பகல் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்துள்ளனர்.

இரும்பு குழாய்களைப் பயன்படுத்தி வீதிகளில் புதைத்து நிரந்த வீதி தடைகள் போல அவற்றை பொலிஸார் அமைத்துள்ளனர்.

கொழும்பு கோட்டையை சூழவுள்ள பகுதிகள், ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பல இடங்களில் இவ்வாறு நிரந்தரமான வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணிகளில் வருவோர் இந்த பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீதித் தடைகளால் காலி முகத்திடலை நோக்கி வருகின்ற அனைத்து பாதைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here