பாராளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ராமநாதன் அர்ச்சுனா இன்று (27) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு நிலப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது மற்றும் துப்பாக்கி காட்டி அச்சுறுத்தல் மேற்கொண்டது தொடர்பாக இவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (26) தினம், அவர் ஒரு பிஸ்தோலை ஏந்தியபடி நிலத் தகராறில் தலையிடும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை இளவலை பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
