இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,500 மில்லியன் ரூபா வருமானம் !

Date:

சித்திரை புத்தாண்டின்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1500 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்த வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார் .

ஒரு வாரத்தில் அதிவேக வீதியின் வருமானம் 130 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், புத்தாண்டு தினத்தில் நாடு முழுவதும் 1,200 பஸ்கள் இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பயணிகள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் புத்தாண்டு காலத்தில் தேவையான பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...