மொட்டுக் கட்சியின் பிரதேச சபை உப தலைவர் கொலை!

0
171

கட்டான பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உப தலைவர் பீட்டர் ஹப்புஆராச்சியின் சடலம் அவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இருந்து நேற்று (28) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நூறு ஏக்கர் தென்னந்தோப்பில் ஒரு கொட்டகைக்கு அருகில் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதன்போது, ​​குறித்த தென்னந்தோப்பில் பணிபுரிந்த காவலர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here