ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.
2011ஆம் ஆண்டு வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சாட்சிகளை தாக்கிய குற்றச்சாட்டில் ஜே. ஸ்ரீ ரங்கா தற்போது விளக்கமறியலில் உள்ளார்.