600,000 அமெரிக்க டொலர் மாயம்! விசாரணை தீவிரம்!!

0
318

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000 அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமக்குரிய கொடுப்பனவு கிடைக்கவில்லை என அமெரிக்கத் அஞ்சல் சேவை விடுத்த முறைப்பாட்டினைத் தொடர்ந்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம்
நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 5 அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here