ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 105,498 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்து நான்கு மாதங்களும் தொடர்ச்சியாக 100,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.
முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும் போது, ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 67.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் ஒட்டுமொத்தமாக 441,177 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளனர்.
N.S