ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டது யாரென தமக்கு தெரியுமென அவர் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் சிஐடி தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.