இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க எமிரேட்ஸ் விமான சேவையுடன் புதிய ஒப்பந்தம்!

0
65

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எமிரேட்ஸ் விமான சேவை தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் நாட்டின் சுற்றுலா மற்றும் வர்த்தகத் தொழில்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பல முன்முயற்சிகளை உள்ளடக்கியது.

ஒப்பந்தம் கைக்காத்திடும் நிகழ்வில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கை தூதுவர் உதய இந்திரரத்ன, எமிரேட்ஸின் பிரதம வர்த்தக அதிகாரி அட்னான் காசிம் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவு எமிரேட்ஸ் முகாமையாளர் சந்தன டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், எமிரேட்ஸ் தனது உலகளாவிய வலையமைப்பில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இலங்கை குறித்து காட்சிப்படுத்துவதன் மூலம் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி செல்லும்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here