ஜனாதிபதித் தேர்தல், ரணில் குறித்து மஹிந்த கருத்து

0
206

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும், ரணில் விக்ரமசிங்க அத்தகைய ஆதரவை இதுவரை கோரவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேள்வி – ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்பட்டதா?

பதில் – “இன்னும் பெயர் இல்லை… எமது கட்சியில் இருந்து வேட்பாளரை நிறுத்துகிறோம்”

கேள்வி – எந்த மாதிரியான வேட்பாளரை முன்வைக்க விரும்புகிறீர்கள்?

பதில் – “வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்”

கேள்வி – தற்போதைய ஜனாதிபதியை கட்சியில் ஆதரிப்பதில் நம்பிக்கை உள்ளதா?”

பதில் – “இன்னும் இல்லை என்று நினைக்கிறேன். அத்தகைய ஆதரவை எங்களிடம் கேட்கவில்லை”

நேற்று (03) வெள்ளவத்தை மயூரபதி ஆலயத்தை வழிபட வந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here