மன்னா ரமேஷை தடுப்புக்காவலில் விசாரணை செய்ய அனுமதி

0
50

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் மன்னா ரமேஷ் என்ற ரமேஷ் பிரிஜனகவை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க, சர்வதேச பொலிஸாரின் சிவப்பு உத்தரவின் பேரில் டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் மன்னா ரமேஷ் என அழைக்கப்படும் ரமேஷ் பிரஜனக இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

அவிசாவளை பிரதேசத்தை மையமாக கொண்டு வர்த்தகர்களிடம் கப்பம் கோருதல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைகள் என மன்னா ரமேஷ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here