இன்றைய முக்கிய செய்திகளின் சுருக்கம் 08/05/2023

Date:

01.தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் இறுதி அறிக்கை மே மூன்றாம் வாரத்தில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படுமென குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறுகிறார் : குழுவின் இடைக்கால அறிக்கைக்கு சுமார் 400 முன்மொழிவுகள் வரை கிடைத்துள்ளதாக அவர் தெரிவிப்பதுடன் இந்த முன்மொழிவுகள் பகுப்பாய்வு மற்றும் மதிப்பாய்வு செய்யப்பட்டு தமது அவதானிப்புகளை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பகிர்ந்து கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

02.சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு (FTA) வழிவகுக்கும் முன்மொழிவுகள் குறித்தும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான (PTA) பேச்சுவார்த்தைகளை தொடங்வும் எதிர்வரும் மே 29ஆம் திகதி வீடியோ தொழில்நுட்பம் மூலம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் அறிமுக சந்திப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச வர்த்தக அலுவலகத்தின் தலைமை அதிகாரியான கே.ஜே.வீரசிங்க தெரிவித்துள்ளார்.

03.ஏப்ரல் மாத இறுதியில் நாட்டின் மொத்த வெளிநாட்டு கையிருப்பின் அளவு 2,755 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இது மார்ச் மாதத்தில் 2,694 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. மத்திய வங்கி தரவு காட்டுகிறது : கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, சீனாவின் மக்கள் வங்கி வழங்கிய 1.4 பில்லியன் இடமாற்று வசதி மூலம் பெறப்பட்ட பண இருப்புகளும் இதில் அடங்கும்.

04.சீரற்ற காலநிலையினால் 6,000 குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது : களுத்துறை, கம்பஹா, பதுளை, திருகோணமலை, இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம் மற்றும் குருநாகலை ஆகிய மாவட்டங்களில் 1,634 குடும்பங்களை சேர்ந்த 6,345 பேர் இவ்வாறு சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பலத்த காற்று மற்றும் வெள்ளம் காரணமாக 87 வீடுகள் சேதமடைந்துள்ளன.

05.கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 3 ரூபாய் சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அந்த 3 ரூபாயை மீண்டும் அறவிட தீர்மானித்துள்ளோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் நெற்பயிரைக் காக்கும் பாரிய பொறுப்பும் நமக்கு உள்ளது. எமது நாட்டிற்கு அரிசியே பிரதான தேவையாகும். இதனால் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க எந்த காரணமும் இல்லை. ஏனெனில் டொலரின் பெறுமதி குறைந்து ரூபாயின் பெறுமதி அதிகரித்து வருகிறது. எனவே, அதைத்தான் நாங்கள் நிர்வகிக்க முயற்சிக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

06.2022 ஆம் ஆண்டில், 211 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை மின்சார கட்டமைப்பில் சேர்க்க எதிர்பார்ப்பதாகவும் அதில் 146 மெகாவாட் சூரிய ஒளியின் மூலம் பெரும் ஆற்றலாக இருக்கும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர கூறுகிறார் : 2027 – 2030ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 3075 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி ஆற்றலை மின்சார கட்டமைப்பில் இணைக்கவும் 152 மெகாவாட் ஆற்றலை சேமிக்கவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

07.சுற்றுலா வருவாய் 2023ஆம் ஆண்டில் மாதத்திற்கு அண்ணளவாக 160 மில்லியன் வரை உள்ளது : 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் வரையான முதல் நான்கு மாதங்களில் ஒட்டுமொத்த சுற்றுலாத்துறை 696.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது; இது 2022 ஆம் ஆண்டின் இதே காலத்தை விட 17.8% அதிகமாகும் கடந்த : மார்ச் மாதத்தில் 125,495 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் ; ஏப்ரலில் 105,498 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இவ்வாண்டில் இதுவரை 441,177 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

08.கொக்குவில் கடலில் இரண்டு பாடசாலை மாணவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன : உயிரிழந்த சிறுவர்கள் இருவரும் 16 வயதுடைய மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளார் : கடலில் குளிக்க சென்றே இரண்டு சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது : மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

09.நாட்டின் சனத்தொகையில் 88% மக்கள் கடன் வாங்குகின்றனர், அல்லது கடன் செலுத்தாமல் இருக்கின்றனர் அல்லது தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கூறுகிறார்: 68% மக்கள் உண்ணும் உணவின் அளவை மட்டுப்படுத்தியுள்ளனர் மற்றும் அவர்கள் விரும்பாத உணவுகளை உண்ண வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்: 40% சிறுவர்களுக்கு கிடைக்க வேண்டிய
கல்வி மற்றும் சுகாதார சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

10.உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தூபக் குச்சி சந்தையில் ன்னோடியான அமிர்தா தூபக் குச்சிகள், இலங்கை தரநிலைகள் (SLS) சான்றிதழைப் பெறுவதன் மூலம் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது: அமிர்தா தூபக் குச்சிகள் Darley Butler & Company Ltd என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்...

இஷாரா உட்பட ஐந்து பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...