ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பங்கேற்புடன் இன்று நடைபெற்ற கூட்டத்திலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், நுவரெலியா மாவட்ட அரச அதிபர், நகர அபிவிருத்தி அதிகாரைிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதன்போது நுவரெலியா நகரை சிறப்பானதொரு சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான விடயங்கள் தொடர்பில் கருத்தகளும், ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. இவை தொடர்பில் ஆராய்ந்து, உரிய ஆய்வுகளின் பின்னர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென குழுவொன்றும் அமைக்கப்பட்டது.
சுமார் 10 இற்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய இக்குழுவில் சுற்றுலாத்துறை, பாதுகாப்பு, நிர்வாகம், திட்டமிடல் துறைசார் அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
N.S