சிக்கல் நிலையில் இருந்த நாட்டை ஸ்திரப்படுத்தி ஒரு வருட காலப்பகுதிக்குள் மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டிருப்பதால் இன்னும் சில வருடங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தை தொடர அவருக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
“நாட்டின் பிரச்சனைகள் களையப்பட்டு இன்று தேர்தலைக் கோராத நிலையை மக்கள் அடைந்துள்ளனர். அரசியல் கட்சிகளும் மறந்துவிட்டன. ஏனெனில் இந்தப் பிரச்சனை இருந்ததால், அதை அகற்றுவது எளிதாக இருந்தது. தற்போது அந்த காயத்தை ஜனாதிபதி குணப்படுத்தியுள்ளார். இப்போது எந்த காயமும் இல்லை. இப்போது சில அரசியல் கட்சிகள் மிகவும் சோகத்தில் உள்ளன. எமது ஜனாதிபதி, அரசாங்கம் மொட்டு அரசாங்கம். அந்த வகையில் பார்த்தால், ஜனாதிபதி ஒரு வருடத்திற்குள் நாட்டை இந்த நிலையில் இருந்து ஸ்திரப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து, வீதி மறியல் போராட்டங்களை நிறுத்தி, இந்த நிலையை உருவாக்கி இருப்பதால் இன்னும் சில வருடங்களுக்கு அந்த பலத்தை அவருக்கு நாம் வழங்க வேண்டும். எங்கள் கட்சியினர் தாக்கப்பட்டனர், எம்.பி.க்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு, கட்சிக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. கட்சியின் மன உறுதியில் பின்னடைவு ஏற்பட்டது. ரணில் விக்கிரமசிங்க இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளும் அதனை சீர்திருத்த உதவியுள்ளன.”
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.