மக்களுக்காக போராடுபவர்களின் உயிர்களுக்கு ஆபத்து!

0
187

மக்களுக்காக போராடியவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆபத்தான சூழ்நிலை நாட்டில் உருவாகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியலை சமூக வலைதளங்களில் பரப்பி, அவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

நேற்றைய தினம் சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவினால் தாக்கப்பட்டதாகவும், இந்த தாக்குதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீதான தொடர் தாக்குதல்களின் ஒரு வடிவம் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குண்டர் தாக்குதலுக்கு உள்ளான பியத் நிகேஷலாவும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது மோசமான நடவடிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here