நிவாரண வரவு செலவுத் திட்டத்தை உடனடியாக தயாரிக்கும் பிரதமர் ரணில்

0
183

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய வரவு செலவுத் திட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட பின்னரும், மக்களுக்கு பாரிய நிவாரணங்களை வழங்கும் வரவு செலவுத் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்ததாகவும், இம்முறையும் அவ்வாறே மேற்கொள்ளப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் மக்களுக்கு அத்தியாவசியமான நிவாரணங்களை வழங்குவதும், மக்களின் வாழ்வாதாரத்தை உருவாக்குவதும், பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவதும் திட்டம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரண வரவு செலவுத் திட்டத்திற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக ரணில் ஏற்கனவே பல வெளிநாடுகளுடன் கலந்துரையாடியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here