ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பகுதிகளுக்கு எரிபொருள் இல்லை

Date:

ஆர்ப்பாட்டக்காரர்களால் வீதிகள் தடைப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.எரிசக்தி அமைச்சில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார்.கொள்கை ரீதியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.முன்னதாக எரிபொருள் விநியோகிக்கும் பவுஸர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தகவல் வௌியாகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரித்திருந்தார்.ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்..குறித்த குழுவினர் வீதிகளில் செல்லும் எரிபொருள் பவுஸர்களை வழிமறித்து தமது பிரதேசத்தில் எரிபொருளை இறக்காவிட்டால் தீ வைப்பதாக கூறி அச்சுறுத்துவதாக தகவல் வௌியாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்ந்தால், எரிபொருள் பவுஸர் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி விநியோகத்தை நிறுத்த வேண்டியிருக்கும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை...

ரத்மலானையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை...

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...