Sunday, February 25, 2024

Latest Posts

இன்றைய முக்கிய செய்திகளின் சுருக்கம் 23/05/2023

 1. சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை தூதுக்குழுவினருடன் இன்று நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார் ;
  முதற்பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க, ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா உள்ளிட்ட குழுவினருடன் இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜனாதிபதி, புறப்பட்டு சென்றுள்ளார் ; எதிர்வரும் மே 25 முதல் 26 வரை டோக்கியோவில் நடைபெறவுள்ள “ஆசியாவின் எதிர்காலம்-28” மாநாட்டில் ஜனாதிபதி மற்றும் இலங்கைப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
 2. 2023 மார்ச் மாதத்தில் 49.2% சதவீதமாகவிருந்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 33.6% ஆகக் குறைந்துள்ளது –
  உணவுப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 27.1%ஆக குறைந்துள்ளது. இது மார்ச் மாதத்தில் 42.3% ஆக இருந்தது.
 3. முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஓய்வு பெற்றதன் பின்னர் புதிய பாராளுமன்ற செயலாளர் நாயகமாக திருமதி குஷானி ரோஹணதீர பதவியேற்றுள்ளார்.
 4. PAFREL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, இலவச தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பின் (ANFREL) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் ; இந்த நியமனம் பாங்கொக்கில் நடைபெற்ற ANFREL இன் 8வது பொதுச் சபையில் இடம்பெற்றது.
 5. டெங்கு ஆன்டிஜென் சோதனைகள், முழு இரத்த சோதனை மற்றும் டெங்குவிற்கான ஆய்வக சோதனைகளின் விலைகள் அதிகரித்துள்ளன ; டெங்கு ஆன்டிஜென் சோதனைக்கு ரூ.1,200 மற்றும் முழு இரத்த சோதனைக்கு ரூ.400ம் அரவிடப்படுகிறது. நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு தொற்றுக்கு மத்தியில், இரத்தப் பரிசோதனையின் விலையை அதிகரிப்பது, பரிசோதனை செய்து கொள்வதற்கான மக்களின் விருப்பத்தை குறைக்கும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
 6. சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தாவரவியல் பூங்காவிற்கான நுழைவுக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன ; அதன்படி, உள்ளூர் பார்வையாளர்களுக்கான நுழைவு கட்டணம் ரூ.100லிருந்து ரூ.200ஆகவும், வெளிநாட்டவர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.3000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது ; இந்த திருத்தம் ஜூலை மாதம் முதல் அமலுக்குவரும்.
 7. இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் முன்னணி பெட்ரோலிய நிறுவனமான சினோபெக் உடன் இலங்கை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது ; ஜனாதிபதி அலுவலகத்தில் இதற்கான ஒப்பந்தம் நேற்று காய்ச்ச்சாத்திடப்பட்டது ; இந்த நடவடிக்கையானது நிலையான மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதில் ஒரு முக்கியமான அம்சமாக இருக்கும்.
 8. டெங்கு நோய் பரவலுடன் இலங்கை பெரிய தொற்றுநோப் பரவலை நோக்கிச் செல்கிறதாக குழந்தை நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர் லக் குமார பெர்னாண்டோ எச்சரிக்கிறார் ; 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட டெங்கு தொற்றுநோய்க்கு பிறகு மிக மோசமான வகையில் இவ்வாண்டு பரவி வருகிறது ; தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், தற்போதைய சூழ்நிலையானது 2017ஆம் ஆண்டில் தொற்றுநோய் நிலையைவிட மோசமானதாக மாறக்கூடும் ; மேலும் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
 9. கொம்பனி வீதி கிராம உத்தியோகத்தர் பிரிவை மும்மொழிகளிலும் குறிப்பிடும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் : ‘ஸ்லேவ் ஐலண்ட்’ என்ற ஆங்கிலப் பெயரை உடனடியாக ‘கம்பெனி வீதி’ என மாற்ற வேண்டும் என பிரதமர் தெரிவித்திருந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 10. 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது சாதாரணதர தனியார் வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது ; இதன்மூலம் பரீட்சார்த்திகளைக் குறிவைக்கும் பயிற்சிகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் பட்டறைகள் தடைசெய்யப்படும் ; மாதிரி வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகிப்பது, துண்டுப்பிரசுரங்கள் வழங்குதல் அல்லது இலத்திரனியல், அச்சிடப்பட்ட ஊடகங்கள் ஊடாக அவ்வாறான நடைமுறைகளை ஊக்குவித்தல் சட்டத்தை மீறுவதாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.