இன்றும் மழை அதிகரிக்கும்

Date:

இன்று (29) மாலை முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடன் கூடிய வானிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் பிற பகுதிகளில் மணிக்கு 30 – 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...

டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை...

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...