முல்லைத்தீவிற்கு யாழில் இருந்து புதிய அரச அதிபர்?

Date:

வடக்கு மாகாணத்தின் ஓர் செயலாளரை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக நியமிக்குமாறு  அமைச்சர் ஒருவர் தனது பரிந்துரையை ஜனாதிபதி மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆகிய இருவரிடம் முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.

வடக்கு மாகாணத்தில் அமைச்சு ஒன்றின் செயலாளராக தற்போது  பணியாற்றுபவரையே இவ்வாறு மாவட்ட அரச அதிபராக நியமிக்குமாறு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

மாவட்ட அரச அதிபர் நியமனம் என்பது அமைச்சரவை அங்கீகாரத்துடன் இடம்பெறும் ஓர் நியமனமாகும்.

இந்த நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் நியமனம் தொடர்பில் ஏதும் பிரஸ்தாபிக்கப்படாதபோதும் பதில் அரச அதிபராக கனகேஸ்வரனை நியமித்தமைக்கான அமைச்சரவை அங்கீகாரமே வழங்கப்பட்டது. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உலக வங்கி – இலங்கை அரசாங்கம் இடையே ஐந்தாண்டு திட்டம் கைச்சாத்து

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை...

பிள்ளையான் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழக்கு தீர்ப்பு...

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...