கொழும்பு இலகு ரயில் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை ஒப்புதல்!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடைநிறுத்தப்பட்ட ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் கொழும்பில் ஆரம்பிக்கப்படவிருந்த இலகு ரயில் போக்குவரத் திட்டத்தை (LRT) மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்வதற்கு முன்னர், சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் முயற்சியில் இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், முதலீட்டுத் திட்டம் அல்லது வெளிநாட்டு உதவிக்காக இலங்கை வேறொரு நாட்டுடன் கைச்சாத்திடும் எந்தவொரு ஒப்பந்தமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் அத்தகைய ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டுவருவது பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கும் முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...