உள்ளூராட்சி உறுப்பினர்கள் பெயர் வர்த்தமானியில் வெளியீடு

0
52

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக அரச அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் பெயர்ப்பட்டியலை வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட காலஅவகாசம் நேற்று(30) நள்ளிரவுடன் நிறைவடைந்ததாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார்.

161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தவிசாளர், மேயர் பதவிகளுக்கான பெயர்களை கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் மாவட்ட அடிப்படையில் உறுப்பினர்கள் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

https://documents.gov.lk/view/extra-gazettes/egz_2025.html

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here