உண்மையை உடைத்த ஷவேந்திர சில்வா!

Date:

தமக்கு செயற்பாட்டு அரசியலுக்குள் வர எந்தவிதமான எண்ணமும் இல்லை என இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது சீனாவில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று வரும் அவர், அங்கிருந்து ஊடகங்களுக்கு வழங்கிய கருத்தில் இதனை கூறியுள்ளார்.  

“எனக்கு செயற்பாட்டு அரசியலுக்குள் வர எந்த எண்ணமும் இல்லை. எந்த அரசியல் மேடையிலும் ஏறிச் செயல்படத் திட்டமில்லை. ஆனால் நாட்டுக்காக ஏதேனும் பொறுப்பு வழங்கப்பட்டால், அதை நிறைவேற்ற நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். என்னுடன் போராடிய மற்றும் போரில் காயமடைந்து மாற்றுத்திறனாளிகளான முன்னாள் படைவீரர்களின் நலனே எனது முதன்மை நோக்கமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.  

மேலும், “நாம் போராடியது எந்த இனத்திற்கும் எதிராக அல்ல; பயங்கரவாதத்திற்கே எதிராக. இருப்பினும் இன்று வரை சில மேற்கத்திய நாடுகள் எங்களை அநியாயமான முறையில் நடத்துகின்றன. எங்கள் போராட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல; பயங்கரவாதத்துக்கு எதிரானதுதான்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

சீனாவில் நடைபெறும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அவர், அங்கிருந்து இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.  

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி...

ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என...

பரீட்சை திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...