ரணிலுக்கு சுதந்திரக் கட்சியின் நிமல் அணி ஆதரவு – துமிந்த திஸாநாயக்க

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் கட்சிக்குள் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்வது என்பது தொடர்பில் கட்சி இன்னும் இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது சகல விடயங்களையும் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்த அவர், கிராம மட்டத்தில் இருந்து கட்சியை மீண்டும் பலப்படுத்தி எதிர்வரும் தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

பல கூட்டணிகள் உருவாகி வருவதாகவும் ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவானது என்றும் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.

கட்சியின் மத்திய குழு கூட்டப்பட்டு புதியவர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதில் தலைவராக செயற்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே செயலாளர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

இன்னும் 10 வருடங்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு கடினம்

வீடமைப்புத் துறை துணை அமைச்சர் டி.பி. சரத் கூறுகையில், நாட்டில் இன்னும்...

நேபாள போராட்டக் குழுவிடம் இருந்து பல உயிர்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானின் வீர தீர செயல்! 

அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் போராட்டம் காரணமாக அங்கு பல...