சம்பந்தனும் சுமந்திரனும் தமிழினத்தின் துரோகிகள்! – மொட்டு எம்.பி. தெரிவிப்பு

Date:

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான இரா.சம்பந்தனும், எம்.ஏ. சுமந்திரனும் தமிழினத்துக்குத் துரோகம் செய்தவர்கள்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப் பல தடவைகள் முன்வந்தபோது சம்பந்தனும், சுமந்திரனுமே அதனைக் குழப்பியடித்தார்கள். அவர்கள் இருவரும் ராஜபக்சக்களுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுபவர்கள்.

வெளிநாடுகளிடம் நிதியைப் பெற்றுக்கொண்டு தமிழினத்துக்குத் துரோகம் செய்த அவர்கள் இருவருக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். அவர்களின் கட்சியும் அந்தத் தேர்தலில் படுதோல்வியடைய வேண்டும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மொட்டுக் கட்சியே வெற்றியடையும். எனவே, தமிழ் மக்கள் எமது கட்சியின் பின்னால் அணிதிரள வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நாம் தீர்வு வழங்குவோம்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

சொக்கா மல்லி என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

புதிய அமைச்சர்!

எரிசக்தி அமைச்சராக கலாநிதி அருண கருணாதிலக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

நிலக்கரி மோசடி பொய்! எதிர்கட்சிக்கு தோல்வி

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் எந்தவிதமான நிலக்கரி மோசடியும்...

JVPயின் முழுநேர தொண்டர்கள் ராஜிதவிடம் புலம்பல்

தற்போதைய அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...