இந்த வருடத்தில் எந்தத் தேர்தலும் இல்லை

0
184

இவ்வருடத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என நம்புவதாக வெகுஜன ஊடக அமைச்சில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் கேட்டதற்கு, தன்னிடம் போக்குவரத்து அமைச்சு இருப்பதாகவும், அதற்கான வேலைகளுக்கு அதாவது வீதிகளையோ அல்லது அரசாங்கத்தையோ தயார்படுத்துவதற்கு பணம் இல்லை எனவும் அமைச்சர் பதிலளித்தார்.

நாட்டை ஸ்திரப்படுத்திய பின், சாலைகள், பாலங்கள், மதகுகளை சீரமைக்க போதிய பணம் கிடைத்த பின் தேர்தலை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும். இறுதியில், சரியான நேரத்தில் தேர்தலை நடத்த அரசு ஏற்பாடு செய்யும் என்று அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here