மாத இறுதிக்குள் இந்திய வீட்டுத் திட்டத்தை நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்பு

Date:

கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் இந்திய வீடமைப்புத் திட்டத்தினை அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆலோசனை வழங்கினார்.

இந்த வீடமைப்பு வேலைத்திட்டம் குறித்து தேசிய வீடமைப்பு அமைச்சு, மாகாண வீடமைப்பு அமைச்சு உள்ளுராட்சி அதிகாரிகள் மற்றும் பயனாளிகளுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடினார்.

திருகோணமலை -(மாதிரி கிராமம் – கும்பிருப்பிட்டி கிழக்கு) அம்பாறை – (மாதிரி கிராமம் – உஹன மகாகந்திய) ஆகிய இடங்களில் அடுத்த மாத இறுதிக்குள் இந்திய வீட்டுத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடலில் வீட்டுப் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...

அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64...

இலங்கை மத்திய வங்கி யின் உத்தரவு

இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், தங்களது மாதாந்த வருமானத்தில்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....