மாத இறுதிக்குள் இந்திய வீட்டுத் திட்டத்தை நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்பு

0
175

கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் இந்திய வீடமைப்புத் திட்டத்தினை அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆலோசனை வழங்கினார்.

இந்த வீடமைப்பு வேலைத்திட்டம் குறித்து தேசிய வீடமைப்பு அமைச்சு, மாகாண வீடமைப்பு அமைச்சு உள்ளுராட்சி அதிகாரிகள் மற்றும் பயனாளிகளுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடினார்.

திருகோணமலை -(மாதிரி கிராமம் – கும்பிருப்பிட்டி கிழக்கு) அம்பாறை – (மாதிரி கிராமம் – உஹன மகாகந்திய) ஆகிய இடங்களில் அடுத்த மாத இறுதிக்குள் இந்திய வீட்டுத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடலில் வீட்டுப் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here