கோட்டாபய அரசாங்கத்தில் கோட்டா முறையில் எரிபொருள்

Date:

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாவனையாளர்களை பதிவுசெய்து கோட்டா முறையில் வாராந்தம் எரிபொருளை வழங்குவதை தவிர வேறு வழியில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜூலை முதல் வாரத்திலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

நிதி நிலைமையை வலுப்படுத்தவும் 24 மணித்தியாலங்களும் மின்சாரத்தை வழங்கவும் நிலையான எரிபொருள் விநியோகம் சாத்தியமாகும் வரையிலும் வாடிக்கையாளர்கள் வாராந்தம் கோட்டா முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.

4 மணித்தியால மின்சாரம் வழங்குவதற்காக டீசல், எரிபொருள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றுக்காக மாதமொன்றுக்கு100 மில்லியன் டொலர் கூடுதலாக செலவிடப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மின்சாரம் மற்றும் மண்ணெண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளது.

4 மாதங்களுக்கு முன்னர் 200 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட மாதாந்த எரிபொருள் செலவு தற்போது 750 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஜித் – ரணில் இடையே ரகசிய சந்திப்பு?

எதிர்காலத்தில் சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி...

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் கருத்து

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின்,...

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...