ஆறு மாதங்களில் தேர்தல் – அடித்துக்கூறும் மரிக்கார்

0
56

அடுத்த ஆறு மாதங்களுக்குள் கண்டிப்பாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டி ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் கூறுகிறார்.

“பலர் நிறைய கனவு காண்கிறார்கள், ஆனால் அவை நனவாகவில்லை. இந்த நாட்டில் ஜனாதிபதிகள் இருந்திருக்கிறார்கள், சாகும்வரை ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள். அது நடந்ததா? அது நடக்காது… இன்று சொல்கிறேன். அவசர ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது. இன்று நான் சொன்னதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஆறு மாதங்களுக்குள் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டி வரும். அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாத காரணத்தால், குடும்பத்தின் மூத்த மகன் நாமல் குமாரயா எப்படி எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார் என்று ராஜபக்ச குடும்பத்தினர் பார்த்து வருகின்றனர். முதல் கட்டமாக நேற்று ஜனாதிபதியின் விவாதத்திற்கு செல்லாமலேயே சீனியர்கள் முதல் சிக்னல் கொடுத்தனர்.”

எஸ். எம். மரிக்கார் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here