Friday, June 28, 2024

Latest Posts

‘தமிழரின் கலையும் கலாசாரமும்’ – சர்வதேச ஆய்வு மாநாடு கிழக்கில்

கிழக்குப் பல்கலைக் கழக வரலாற்றில் முதன்முறையாக “தமிழரின் கலையும் கலாசாரமும் என்ற கருப்பொருளில் சர்வதேச ஆய்வு மாநாடு கிழக்குப் பல்கலைக் கழக நல்லாயா மண்டபத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்றது.

உலக மொழிகளில் மூத்த மொழியாக தமிழ் மொழியினை மையாமாகக் கொண்டு கிழக்குப் பல்கலைக் கழகம், வவுனியா பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக் கழகம், சென்னை அண்ணா பல்கலைக் கழகம், சென்னை வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து இம்மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தனர்.

மட்டக்களப்புத் தமிழர்களின் பண்பாடுகளையும் கலை உணர்வுகளையும் வெளியுலகிற்குக் கொண்டு செல்வதற்கான ஒரு மேடையாக இந்த மாநாடு அமைந்தது.

தமிழர்களுடைய நூற்றுக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் உருவாக்கிய கலை சிற்பங்கள, நடனம் மற்றும் அதன் கலை நுட்பங்களை கலாச்சார ரீதியாக இன்று எவ்வாறு பலகலைக்கழக ஆய்வாளர்கள் மத்தியில் நடைமுறையில் எவ்வாறு சாத்தியமானது என்பது தொடர்பில் மாநாட்டில் முன்நிலைப்படுத்தப்பட்டது.

முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பிறந்த மண்ணில் இயல், இசை, நாடகம் என்ற மூன்றையும் மையப்படுத்தி கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் பல்கலைக்கழக மானிங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சந்தான பி உடவத்த, இலங்கை யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் துணைத்தலைவர் க சிறிசாய் முரளி உலகத் தமிழர் பொருளாதார நிறுவனத்தின் தலைவர் கலாநிதி வீ.ஆர்.எஸ்.சம்பத், அண்ணா பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ஆர் வேல்ராஜ், மூத்த வாழ்நாள் பேராசிரியர் ஏ.சண்முகதாஸ், வவுனிய பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் ரி.மங்களேஸ்வரன், தமிழ் நாடு சென்னை உலக தமிழர் சங்க தலைவர் கலாநிதி வி.ஜி.சந்தோசம், இந்தியா பாண்டிச்சேரி பல்கலைக் கழக பணிப்பாளர் பேராசிரியர் பி.இராமலிங்கம், சென்னை வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி வேந்தர் கலாநிதி ஜி.விஸ்வநாதன் மற்றும் இலங்கை, இந்தியா, அவுஸ்டேலியா, கனடா, லண்டன், மொரிசீயஸ், போன்ற நாடுகளில் இருந்து ஆய்வாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழர்கள் பயன்படுத்திய ஆதிகால ஓலைச்சுவடிகளை நவீனமயப்படுத்தி 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை இளைய சமூகத்திற்கு ஏற்றவகையில் டிஜட்டல் தொழில்நுட்பமயப்படுத்தி இறுவெட்டாக வெளியீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.